சரக்கொன்றை விதை - 5 Grm

By admin
0
(0)
1 847
20
Out of Stock
New

கொன்றை மலர் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. இந்துக்கள், கொன்றைப் பூவை சிவனின் பூஜைக்குரியதாகக் கருதுகின்றனர். சமய இலக்கியங்கள், சிவபெருமானைக் கொன்றைப் பூவைத் தலையில் சூடியவராக வர்ணிக்கின்றன.

கொன்றை மலர் பற்றி தமிழ் இலக்கியங்களில் நிறைய சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ் புத்தாண்டான சித்திரையை வரவேற்கும் விதமாக, பொன்னிற கொன்றை மலர்கள் சரம் சரமாக பூத்துக் குலுங்குவதாக கருதுகின்றனர். குறிப்பாக, சித்திரை மாதத்தில் மட்டும் இந்த பூ பூக்கும். சிவபெருமானுக்கு உகந்த மலர் என்பதால், பல கோவில்களில் தலவிருட்சமாக உள்ளது. மேலும், கேரளாவில் சித்திரை விசு அன்று நடத்தும் பூஜையில் சரக்கொன்றை மலருக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். எனவே, இந்த பூவுக்கு சித்திரைப் பூ, சுவர்ண புஷ்பம் என்ற பெயர்களும் உண்டு.

வெப்ப மண்டலம் மற்றும் குறைந்த வெப்ப மண்டலப் பகுதிகளில் நன்றாக வளரக்கூடியது. நீர் வடியக்கூடிய நிலத்தில் சிறப்பாக வளரும். கோடை வறட்சியையும் தாங்கக் கூடியது. சரக்கொன்றை மரத்தின் பூ, இலை மற்றும் மரப் பட்டைக்கு மருத்துவக்குணம் உள்ளது. பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. சரக்கொன்றை பூவையும் இளம்கொழுந்தையும் துவையல் செய்து சாப்பிடலாம், பூவை கஷாயம் செய்து சாப்பிடலாம். இப்படி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி சரியாகும். கூடவே வயிற்றுக்கோளாறு, மேகக்கோளாறு போன்றவையும் சரியாகும்.

சரக்கொன்றை காயின் உள்ளே இருக்கும் சதைப்பற்றை, நாம் சமையலில் சேர்க்கும் புளியைப்போன்று பயன்படுத்தினால் பித்தம் சரியாகும். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் சாப்பிட்டால் மலப்பிரச்னை சரியாகும். இன்னும் பல பலன்கள் இந்த சரக்கொன்றை மலரில் உள்ளது.

Shipping Cost 0
Shipping Time Ready to ship in 4-7 Business Days
Location

No reviews found.

No comments found for this product. Be the first to comment!