மகா வில்வம் மரம்

By admin
0
(0)
0 120
600
Out of Stock
New

தேவலோகத்தைச் சேர்ந்த பஞ்ச தருக்களில் ஐந்து மரங்களில் மகாவில்வமும் ஒன்று (பாதிரி, மா

வன்னி, மந்தாரை மற்றவை)

ஒரு முறை " மகா வில்வம் " பிரதஷினம் வந்தால் ..கைலாய மலை போய் வந்த பலன் கிடைக்கும்.மர

 மகா வில்வம் வித்தியாசமானது.5,7,9,11,12,இதழ்கள் கொண்டதாக விளங்குகிறது.

 வில்வத்தில் 12 வகைகள் உள்ளன.அவற்றில் மகா வில்வம்,காசி வில்வம்,ஏக வில்வம் என்னும்

மூன்றும் முக்கியமானவை.

 இதில் மஹாவில்வத்தை கோவில்,ஆசிரமம்,சிவசமாதி(ஜீவசமாதியின் நிஜப் பெயர்) போன்ற இடங்களில் மட்டுமே வளர்க்க வேண்டும்;(எக்காரணம் கொண்டும் வீட்டில்,வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கக் கூடாது)

 மஹாவில்வத்தில் இலைகள் ஒரு காம்பில் ஏழு,ஒன்பது,பனிரெண்டாக இருக்கும்.

 மகா வில்வ தளத்தினால் அர்சிப்பது மிகவும் விசேசமானது.பன்மடங்காய் பலன்

தருவது.புண்ணியத்தை மழையாகப் பொழிவது...அதனால் ஆலயங்களில் மட்டுமே அபூர்வமாக வளர்க்கப்படும்

 மகா வில்வதளங்களை அதிகமாகப் பறித்தல் கூடாது.இதனால் புண்ணிய மகா வில்வ மரத்தை அனைவரும் தரிசிக்கலாம். ஆலயங்களில் மக்கள் நன்மைக்காக நடத்தப் பெறும் பூசனைகளிலும் யாகத்திலும் பயன்படுத்த வேண்டும்.


மகா வில்வ மரத்தை சென்னை மாங்காடு வாலீஸ்வரர் சிவாலயத்திலும் ,கோவூர் சுந்தரேஸ்வரர் சிவாலயத்திலும் தஞ்சை கல்யாணபுரம் ஸ்ரீ வைத்தியநாதர் கோயிலிலும் தரிசிக்கலாம்.

 காசி வில்வ மரத்தை தல மரமாக விராலி மலை முருகன் கோயிலிலும் நெய்வேலி நடராஜர் தியானசபையிலும் காணலாம்.


மிகவும் அரிதான ஏக வில்வத்தினை ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் ஆலயத்தில் தரிசிக்கலாம்.

 மகா வில்வமானது நடராஜ் பெருமான் நாட்டியத்தில் உத்திர நட்சத்திர நாளில் அபிஜத் முகூர்த்தம்,பிரம்ம முகூர்த்தம்போன்ற பன்னிரு முகூர்த்தங்களில் ஒவ்வொரு வில்வ இலையாக உண்டானது.இதன் ஆதி மூலத்தை சிதம்பரத்தில் சிதம்பர ரகசியத்தின் ஒரு அங்கமாய் உள்ள சுவர்ண வில்வ மாலையாக தரிசிக்கலாம்.

Shipping Cost 0
Shipping Time Ready to ship in 4-7 Business Days
Location

No reviews found.

No comments found for this product. Be the first to comment!