நாட்டு மஞ்சள் கிழங்கு 900 Grm - ₹ 100

By admin
0
(0)
0 2142
100
Out of Stock
New

எதிர்ப்பு சக்தி அதிகரிக்கணுமா, மஞ்சளை இப்படி டீ போட்டு குடிங்க, நன்மையும் தெரிஞ்சுக்கங்க!

மஞ்சள் மருத்துவ குணங்களோடு மகத்துவமிக்கதும் கூட. இந்த மஞ்சளை கொண்டு எப்படி தேநீர் தயாரிப்பது, என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று அறிவோம்.

 

 

உடலுக்கு எதிர்ப்பு சக்தி என்பது எல்லா காலங்களிலும் தேவையானது. அதிலும் தற்போது கொரோனா தொற்று சற்றும் குறையாமல் இருக்கும் இந்த காலங்களிலும் கூட. அப்படியான எதிர்ப்புசக்தியை தேட வேண்டியதில்லை. வீட்டிலிருக்கும் மஞ்சள் மட்டுமே கூட வேண்டிய சக்தியை கொடுத்துவிடும். அப்படி உடலுக்கு உடனடியாக எதிர்ப்பு சக்தி தரும் பொருள்களில் ஒன்று மஞ்சள்.

காலங்காலமாக சமையலில் சேர்க்கப்படும் முதன்மை பொருளான மஞ்சள் பலவிதமான மருத்துவகுணங்களை கொண்டிருப்பதை அறிவோம்.இந்த மஞ்சளை கொண்டும் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். கூடுதலாக இவை உடலுக்கு தரும் நன்மைகள் குறித்தும் தெரிந்துகொண்டால் நிச்சயம் மஞ்சளை தவிர்க்க மாட்டீர்கள். அப்படியான மஞ்சளை தேநீராக்கி எடுத்துகொள்ளும் முறை குறித்தும் பலன்கள் குறித்தும் பார்க்கலாம்.

 

​மஞ்சளின் மகிமை

 

காலங்காலமாக மஞ்சளை சமையலுக்கும், அழகுக்கும், மருத்துவத்துக்கும் பயன்படுத்தி வருகிறோம். முன்னோர்கள் காலம் முதல் நமது வீட்டிலேயே சமையலறையில் ஆரோக்கியமான பொருள்கள் நிறைந்திருக்கிறது. இதை சீராக பயன்படுத்தினாலே உடலும் ஆரோக்கியமாக இருக்கும். உணவில் நிறத்தை கொடுப்பதோடு சுவையும் கொடுக்ககூடியது மஞ்சள்.

மஞ்சளில் முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், காஞ்சி மஞ்சள், குட மஞ்சள், குரங்கு மஞ்சள், காட்டு மஞ்சள், பலா மஞ்சள், மர மஞ்சள், நாக மஞ்சள் என்று பலவிதமான மஞ்சளின் வகைகள் உண்டு. அதில் ஆலப்புழா மஞ்சள் சிறந்த மஞ்சளாக சொல்லப்படுகிறது.

 

மஞ்சளில் குர்குமின் என்னும் வேதிப்பொருள் உண்டு. இவை தான் மஞ்சளுக்குரிய நிறத்தையும் தருகிறது. குர்குமின் எதிர்ப்பு அழற்சி நோய் எதிர்ப்பு அதிகரிக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. மஞ்சளை சமையலில் பயன்படுத்துவது போன்று, இதை தேநீராக்கியும் குடிக்கலாம்.

​மஞ்சள் தேநீர்

தினமும் காலையில் காஃபி, டீ குடிப்பது போன்று மஞ்சள் தூளை பயன்படுத்தியும் டீ தயாரிக்கலாம். அதுவும் எளிதாகவே எப்படி என்று பார்க்கலாம். மஞ்சள் கிழங்காக அல்லது மஞ்சள் கிழங்கை வாங்கி அரைத்து தூளாக்கியும் வைத்துகொள்ளலாம்.

ஒருவருக்கு தேவையான அளவில் மஞ்சள் டீ தயாரிக்கலாம்.

தேவை

மஞ்சள் கிழங்கு - கால் டீஸ்பூன் துருவல் (அல்லது)

மஞ்சள் தூள்- கால் டீஸ்பூனில் பாதி அளவு,

சீரகத்தூள் - 3 சிட்டிகை,

இஞ்சித்துருவல் - கால் டீஸ்பூன்,

நாட்டுச்சர்க்கரை அல்லது பனங்கருப்பட்டி - இனிப்பு தேவையெனில்

எலுமிச்சைச்சாறு - 3 துளி

 

ஒரு கப் நீரை எடுத்து கொதிக்கவிடவும். நீர் கொதித்ததும் மஞ்சள் கிழங்காக இருந்தால் அப்படியே துருவி கொதிக்கும் நீரில் சேர்த்து, (மஞ்சள் தூள் கால் டீஸ்பூனில் பாதி அளவு) இஞ்சித்துருவல் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். சீரகத்தூள் சேர்த்து இறக்கி வடிகட்டவும். இனிப்பு தேவையெனில் நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து இளஞ்சூடாக குடிக்க வேண்டும். மஞ்சள் வாடை இல்லாமல் மசாலா வாசமும் இஞ்சி வாசமும் சேர்ந்து சுவையாக இருக்கும். தினமும் ஒரு கப் குடித்து வந்தாலே போதுமானது. அதற்கு மேல் தேவையில்லை. இதை குடிப்பதால் உடலுக்கு உண்டாகும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

​புற்றுநோயை தடுக்கும்

 

 

மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் வேதிப்பொருள் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. இவை சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக எதிர்ப்பு அழற்சியாக செயல்படுவதால் உயிரணுக்கள் பாதுகாக்கப்படுகிறது. இவை புற்று செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. உணவில் மஞ்சள் தூளை சேர்த்து வந்தாலே பெருமளவு புற்றுநோய் வருவதை தடுத்துவிட முடியும்.

​உடலுக்கு எதிர்ப்பு சக்தி

 

மஞ்சளில் இருக்கும் குர்குமின் எதிர்ப்பு அழற்சி பண்புகளை கொண்டிருப்பதால் பாக்டீரியா மற்றூம் வைரஸ் எதிர்ப்புடன் இணைந்து உடலில் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க உதவுகிறது. உடலில் இருக்கும் நச்சு கிருமிகளை வெளியேற்ற செய்கிறது. அதோடு உடலில் இருக்கும் கெட்ட நீரை வெளியேற்றுவதோடு செரிமான பிரச்சனைக்கும் முற்றூப்புள்ளி வைக்கிறது.

 

குடல் புண், வாயு பிரச்சனைகள் வயிற்று கோளாறுகள் போன்றவற்றை நீக்கி கல்லீரலை பலப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நிறைவான எதிர்ப்பு சக்தியோடு.

​நுரையீரல் வலுப்படுகிறது

 

 

மஞ்சள் ஆக்ஸிஜனற்றத்தை கொண்டிருப்பதால் இவை நுரையீரலில் இருக்கும் குறைபாட்டை சீர் செய்கிறது. காய்ச்சல், சளி, ஜலதோஷம் வரும் போது மஞ்சள் கிழங்கை எண்ணெயில் தேய்த்து சுட்டு அதன் புகையை சுவாசிப்பது முன்னோர்கள் காலம் தொட்டே உண்டு.

 

தொண்டைப்புண் சளி, இருமல் வரும் போதும் மஞ்சள் தூளை பாலில் கலந்து குடிப்பதும் உண்டு. இதனால் காய்ச்சல், சளி குணமாவதோடு அவை நுரையீரல் வரை சென்று பாதிப்படையாமல காக்கவும் மஞ்சள் உதவுகிறது.

​நரம்பு மண்டலத்துக்கு வலு சேர்க்கிறது

 

 

மஞ்சளில் இருக்கும் குர்குமின் உடலில் நரம்பு மண்டலத்தை பாதுகாக்க உதவுகிறது. இவை உடலில் உயிரணுக்களை சேதத்திலிருந்து பாதுகாப்பதால் நரம்பியல் பிரச்சனை வராமல் தடுக்கப்படுகிறது. பொதுவாகவே வயதான பிறகு அல்சைமர் என்று சொல்லகூடிய மூளைக்கோளாறு நோய் வருவதற்கான வாய்ப்பு உண்டு.

 இவை மூளையின் செயல்பாட்டை பாதிக்கும் வகையில் செய்யும். மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் வேதிப்பொருள் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துவதால் அல்சைமர் என்னும் நோய்க்கான வாய்ப்பு குறைகிறது.

​உடல் எடை குறைய

 

உடல் எடை குறைப்புக்கும் மஞ்சள் தேநீருக்கும் சம்பந்தம் உண்டா என்று கேட்கலாம். ஆனால் உண்மையில் இவை சிறப்பாக செயல்படுகிறது. உடலில் இருக்கும் கெட்ட் கொழுப்பை நீக்கி வெளியேற்றுகிறது. எடையை கட்டுக்குள் வைக்கும் ஆயுர்வேத கலவையாக மஞ்சளும் இஞ்சியும் இருப்பதால் இவை சிறந்த தீர்வாக இருக்கிறது. தொடர்ந்து குடித்துவந்தால் உடல் எடை குறைவதை உணரலாம்.

​மூட்டுவலி தீவிரம் குறையும்

 

 

மஞ்சள் எதிர்ப்பு அழற்சி கொண்ட பொருள் என்பதால் அவை மூட்டுவலியின் தீவிரத்தை குறைக்க உதவுகிறது. ஆய்வு ஒன்றில் மஞ்சள் தேநீரை தொடர்ந்து எடுத்துகொண்டவர்களின் மூட்டுவலி தீவிரம் குறைந்திருந்ததாக கண்டறியப்பட்டது.. மருத்துவ ஆய்விலும் இவை நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

குறிப்பு

மஞ்சள் மிகவும் நன்மை பயக்க கூடியது. ஆனால் பயன்படுத்தப்படும் மஞ்சள் தூய்மையானதாகவும், கலப்படமில்லாததாகவும் இருக்க வேண்டும். இதை அளவோடு மருந்தாக பயன்படுத்தினால் பிரச்சனை இல்லை. ஆனால் அதிகளவு தொடர்ந்து பயன்படுத்தினால் சில குறைபாடுகளையும் உண்டாக்கிவிடும் என்பதால் அளவுக்கு மீறி பயன்படுத்த வேண்டாம்.

Thanks to https://tamil.samayam.com/

Shipping Cost 0
Shipping Time Ready to ship in 4-7 Business Days
Location

No reviews found.

No comments found for this product. Be the first to comment!